2,000 கிலோ அரிசியில் கிடா விருந்து.. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு!

 
 ஸ்ரீ முத்தையா சுவாமி கோவில்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை ஸ்ரீ முத்தையா சுவாமி கோவிலில் மார்கழி மாத பெருவிழா கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் விவசாயம் செழிக்கவும், உலக நலனுக்காகவும் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில், ஆட்டு விருந்து அன்னதானமாக வழங்கப்படுவது வழக்கம்.  முத்தையா சுவாமிக்கு பக்தர்கள் கருப்பு ஆடுகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்த விழாவில் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த ஆண்டு கரும்பாறை ஸ்ரீ முத்தையா சுவாமி கோயிலின் மார்கழி மாத திருவிழா இன்று நடைபெற்றது. முத்தையா சுவாமிக்கு பக்தர்கள் பொங்கல், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் 66 கிடா ஆடுகளை காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து, 2,000 கிலோ அரிசியில் கிடா விருந்து சமைத்து, ஆண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆட்டு விருந்தில் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கிண்டிமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டு சாப்பிட்டனர். இவ்விழா குறித்து கிராம மக்கள் கூறியதாவது, விவசாயம் செழிக்க வேண்டி ஸ்ரீ முத்தையா சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்பது வழக்கம். இவ்விழாவில் பங்கேற்று அன்னதானம் செய்பவர்கள், சாப்பிட்ட இலைகளை எடுத்துச் செல்லாமல் அங்கேயே விட்டுவிட வேண்டும். இலைகள் காய்ந்த பின்னரே பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஸ்ரீ முத்தையா ஸ்வாமி கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக் கொண்டு, அந்த காரியம் நிறைவேறினால் கருப்பு ஆடுகளை காணிக்கையாக கொடுப்பது வழக்கம். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு, இவ்வாறு பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற கருப்பு ஆடுகளை காணிக்கையாக வழங்குவது வழக்கம். திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களால் பாரம்பரியமாக இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web