பெரும் அதிர்ச்சி... லேடி சூப்பர் ஸ்டார்... இளம் வயதில் பல சாதனைகள்... பெண் போலீஸ் அதிகாரி விபத்தில் மரணம்.. பொதுமக்கள் சோகம்!

 
ஜுன்மோனி ரபா

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுன்மோனி ரபா. இவர் அதே பகுதியில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தனது நேர்மையாலும், துணிச்சலான நடவடிக்கையாலும் மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார்.  இந்நிலையில், ஜுன்மோனி ரபா சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தி அசாம் மக்களை பெரும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நாகோன் மாவட்டத்தில் உள்ள சருபுகியா கிராமத்தில் ஜுன்மோனி ரபாவின் கார் கண்டெய்னர் மீது மோதியது. படுகாயமடைந்த ஜுன்மோனி ரபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து நடந்த உடனேயே கன்டெய்னர் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து நடந்த போது ஜுன்மோனி ரபா பணியில் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். '

ஜுன்மோனி ரபா

பல கடினமான வழக்குகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு லேடி சிங்கம் என பெயர் பெற்றவர். இவர், கடந்தாண்டு ஊழல் செய்ததாக பணி இடைநீக்கம் நடவடிக்கையை சந்தித்தவர்.

கடந்தாண்டு ஜுன்மோனி ரபாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த உடன் வருங்கால கணவர் மோசடி நபர் என தெரியவந்ததும் நடவடிக்கை எடுத்தார். ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி எனக் கூறி கொண்டு, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது.

ஜுன்மோனி ரபா

இதுபோன்று மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் திருமணம் செய்யவிருந்த ராணா மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதற்கான முழு ஆதாரங்களைத் திரட்டி ஜுன்மோனி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர் என்றும் பாராமல் ராணா போஹாடை அதிரடியாகக் கைது செய்து பெயர்பெற்றார். இந்நிலையில், சாலை விபத்தில் ஜுன்மோனி ரபா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!