பிறந்த சில நாட்களில் குழந்தை மரணம்... ஆவேசத்தில் அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்த தந்தை!

 
மருத்துவமனை

குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், ஆவேசமடைந்த தந்தை துக்கத்தில் அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை குரோம்பேட்டை சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வசித்து வருபவர் யுவராஜ்(24). ஏசி மெக்கானிக்காக பணி புரிந்து வரும் இவரது மனைவி ராதிகா. கர்ப்பிணியான ராதிகாவுக்கு கடந்த டிசம்பர் 27ம் தேதி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த பச்சிளம் குழந்தை ஒரு கிலோ நானூறு கிராம் எடையுடன் இருந்ததாகவும், எட்டு மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

குழந்தை வாயில் டேப்

குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயும், எடை குறைவாகவும் பிறந்ததால் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படடது. இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மருத்துவமனை
இதனால் மனமுடைந்த நிலையில் யுவராஜ், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் கண்ணாடியை தனது கைகளால் அடித்து உடைத்துள்ளார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவியது.  கண்ணாடியை உடைத்த போது, கண்ணாடி கையை கிழித்ததில் படுகாயமடைந்து யுவராஜ் கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துமனை ஊழியர்கள் அனுமதித்தனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web