பகீர் வீடியோ... பெட்ரோல் பங்க்கில் பயங்கர தீவிபத்து... 5 பேர் உடல் கருகி பலி... 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
பெட்ரோல் பங்க் தீவிபத்து

 ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக  ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.  இந்த  தீவிபத்தில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளனர்

. இதில்   5 பேர் உயிரிழந்ததாகவும் 35க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்கில் பிடித்த தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் தீவிபத்து

இன்று அதிகாலை 5.30 மணிக்கு  பெட்ரோல் பம்பில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி வந்து மோதியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில்  சந்திக்க முதல்வர் பஜன் லால் சர்மா மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web