பகீர் வீடியோ... திரையரங்கிற்குள் வெடித்த பட்டாசு.. தெறித்து ஓடிய ரசிகர்கள்...!!

நேற்று தீபாவளியை முன்னிட்டு இந்தியா முழுவதும் பட்டாசு, புத்தாடை, இனிப்புக்கள் , புது சினிமா என ஜாலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் நேற்று திரையரங்குகளில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் ‘டைகர் 3’ படம் வெளியானது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சல்மான் கானின் படம் தீபாவளி விடுமுறைக்கு வெளியானதால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் இருந்தனர்.
Malegaon is built different, just for a cameo of SRK😂🔥 @iamsrk #Tiger3
— Maddie🇵🇸 (@__emptinesss) November 13, 2023
pic.twitter.com/e3eM7oeOVm
புதுப்படம் என்றாலே கட் அவுட் , பாலாபிஷேகம், கேக் வெட்டுதல் பட்டாசு வெடித்தல் எல்லாமே எந்நாளும் உள்ள கலாட்டாக்கள் தான். ஆனால் ‘டைகர்3’ பட கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஒருபடி மேலே போய், திரையரங்கிற்கு உள்ளேயே பட்டாசு வெடித்து அமர்க்களம் செய்துள்ளனர் .
இந்த திடீர் பட்டாசு வெடிப்பால் படம் பார்க்க வந்த பார்வையாளர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடும்படியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!