மிதந்துட்டே சாப்பிடலாம்... சென்னையில் முதன் முறையாக மிதவை உணவக கப்பல்!

 
மிதவை உணவகம்

 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் மிதவை உணவக கப்பல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதனையடுத்து  கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால்  மிதவை உணவு கப்பலில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. இந்தப் பணிகள் இன்னும் 2 மாதங்களில் நடைபெற்று முடியும் நிலையில் முட்டுக்காட்டுக்கு செல்ல இப்பவே ப்ளான் பண்ணி வருகின்றனர்.  
சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை  அமைச்சர் ராமச்சந்திரன் 2023  மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார்.

மிதவை உணவகம்
தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பலாக இது இருக்கும். இந்த கப்பல் 2 அடுக்குகளுடன்  உணவக பயணக் கப்பல் அமைக்கப்படும். இதனுடைய நீளம் 125 அடி, அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட்டு வருகிறது. இதன்  தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் தயாராகி வருகிறது.  முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்ணும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமையலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்படுகிறது.

மிதவை உணவகம்

இந்தக்கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.  சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் ஏற்கனவே  படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவைப் படகுகள், இயந்திரப் படகுகள், வேகமான இயந்திரப் படகுகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்  முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான  2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் தொடங்கப்பட உள்ளது.பொதுமக்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து  மிதவை உணவு கப்பலில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web