அதிர்ச்சி... மாணவியை காரில் அழைத்து சென்று பாலியல் தொல்லை... கல்லூரி உதவி பேராசிரியர் கைது!

 
டேனிபால்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள உப்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  டேனி பால். இவர், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கல்லூரி பணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம்

இந்நிலையில் உப்பட்டி பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த இரண்டு பள்ளி மாணவிகளை டேனி பால், வீட்டில் இறக்கி விடுவதாக கூறி தனது காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதில்  ஒரு மாணவியை அவரது வீட்டில் இறக்கி விட்ட டேனி பால், மற்றொரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

போக்சோ நீதிமன்றம்

அவரிடம் இருந்து தப்பித்த மாணவியை அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் பத்திரமாக மீட்டு மாணவியின் வீட்டில் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் பேரில் டேனி பாலை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web