மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பன்.. அடித்தே கொன்ற கணவன்.. துணை போன சக நண்பர்கள்!

 
மணிகண்டன்

தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த ஜங்கலஹள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் மாயக்கண்ணன், கேசவன் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில், மூன்று பேரும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் ஓட்டுபள்ளம்- ஜங்கலஹள்ளி சாலையில் வந்தனர். அப்போது மணிகண்டனின் மற்றொரு நண்பர் அறிவழகன் என்பவர் வந்து மூவரையும் தடுத்து நிறுத்தி பேசினார்.

அப்போது மணிகண்டனை பார்த்து நீ செய்வது சரியில்லை என்று கேட்டார். அறிவழகனின் மனைவியுடன் மணிகண்டனுக்கு தொடர்பு இருப்பது ஏற்கனவே தெரிந்ததால் மணிகண்டன் மீது கடும் கோபத்தில் இருந்தார். பிறகு ஏன் என் மனைவியுடன் பழகுகிறாய்? மணிகண்டனிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் அறிவழகன் இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த கேசவனும், மாயக்கண்ணனும் மணிகண்டனை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மணிகண்டன் கீழே விழுந்ததாக, சிகிச்சைக்காக நாடகமாடி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மணிகண்டனுடன் மது அருந்தச் சென்ற கேசவன்,அறிவழகன், மாயக்கண்ணன் ஆகியோர் தாக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து மாயக்கண்ணன், அறிவ ழகன்இருவரும் தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மணிகண்டனுக்கும் தலையில் காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி மணிகண்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, தலைமறைவான மாயக்கண்ணன், அறிவழகன் ஆகியோரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ஈரோட்டில் செல்போன் சிக்னலை பயன்படுத்தி பதுங்கியிருந்த மாயக்கண்ணனை தனிப்படை போலீசார் பிடித்து பொம்மிடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து கைது செய்தனர். மேலும் இதை அறிந்த அறிவழகன் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், தனது நண்பரை கொன்ற நண்பரை காப்பாற்ற நண்பர்கள் இருவர் விபத்து நடப்பது போல் நடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web