பகீர் வீடியோ... தீப்பிடித்த அரசு பேருந்து...பயணிகள் அலறி அடித்து ஓட்டம்..!!

 
தீப்பிடித்த பேருந்து

சேலம் மாவட்டத்தில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  கருமத்தம்பட்டி அருகே  வந்த போது  திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பியுள்ளது. இதனையடுத்து  ஓட்டுநர் உடனடியாக பேருந்தை  சாலை ஓரத்தில் நிறுத்தினார்.  அப்போது திடீரென அப்பேருந்து  தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.  பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து கொண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.  அப்பேருந்து மேலும் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.


 

இதனைத்தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த  தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் பேருந்தில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
சேலத்திலிருந்து கோவைக்கு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக   பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.சேலத்திலிருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று பிற்பகல்  1.30 க்கு கிளம்பியது. பேருந்தில் மொத்தம் 67 பயணிகள் பயணித்தனர்.

தீப்பிடித்த பேருந்து
 

மாலை 4 மணியளவில், கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, எஞ்ஜீனின் முன்புறம் புகை வருவதை கண்ட ஓட்டுனர் சிவகுமார்   சந்தேகமடைந்து பேருந்தை நெடுஞ்சாலை மேம்பாலத்தின் ஓரத்திலேயே நிறுத்தி பேருந்தை சோதனையிட்டனர்.  அதற்குள்  தீ மளமளவென பரவி, பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும், அவ்வழியே சென்ற வாகனங்களும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  தகவல் அறிந்ததும் சூலூரிலிருந்து தீயணைப்பு துறையினர் விரைந்தனர். இருப்பினும் அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து முற்றிலும் கருகி சாம்பலானது.  இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web