உணவகத்திற்குள் புகுந்த அரசு பேருந்து.... ஒருவர் பலி... 2 பேர் படுகாயம்!!

 
bus

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திருப்பூருக்கு திண்டுக்கல் வழியாக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து திண்டுக்கல் பழனி சாலையில் முத்தனம் பட்டி  அருகில்   சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையின் குறுக்கே சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க  டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அந்த நேரத்தில்  லேசாக மழையும் பெய்து கொண்டிருந்தது.

விபத்து

இதனால்  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த உணவகத்திற்குள்  புகுந்துவிட்டது.  இதில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சின்னமல்லணம்பட்டியில் வசித்து வரும்    மொக்கசாமி மகன் சின்னு  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மேலும்  2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்

படுகாயம் அடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web