கை நிறைய வளையல்.. 4வது திருமணத்திற்கு ரெடியான வனிதா?!
‘சந்திரலேகா’ திரைப்படத்தில் அறிமுகமான வனிதா விஜயகுமார் அதன் பின்னர் நடிகையாக பிரபலமானதை விட தன்னுடைய பெர்சனல் வாழ்க்கைப் பிரச்சனைகளால் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
நடிகர் ஆகாஷை முதன்முதலாக திருமணம் செய்த பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்த வனிதா அதன் பின்னர் தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண பந்தமும் வனிதாவுக்கு சந்தோஷத்தைத் தராமல் சங்கடத்தையே கொடுத்த நிலையில், அதிலிருந்தும் விவாகரத்து கோரி வெளியேறினார்.
அதன் பின்னர், 2013ம் ஆண்டு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் வாழ்க்கையைத் தொடங்கிய வனிதா, 2017ம் ஆண்டு அந்த உறவில் இருந்து விலகினார். பின்னர் பீட்டர் பால் என்பவருடன் உறவில் இருந்த வனிதா அவரை 3வதாக திருமணம் செய்து கொண்டு இனி என் வாழ்க்கையில் பிரகாசம் வீசும் என்றார். விதியின் வசம் அந்த திருமண உறவும் வனிதாவுக்கு நிலைக்கவில்லை. அதிலிருந்தும் பிரிந்தார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா விஜயகுமார் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகளான ஜோவிகாவையும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது கடற்கரையில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருக்கும் வனிதா விஜயகுமார். அதில் Save The Date October 5 என்று குறிப்பிட்டுள்ளார்.
இருவருக்கும் வருகிற 5ம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக சொல்லப்படுகிற நிலையில், ரசிகர்கள் இது திரைப்படத்திற்கான பப்ளிசிட்டியா என்று கேள்வியெழுப்பினாலும், பலரும் இந்த திருமண பந்தமாவது உங்கள் வாழ்க்கையில் நிலைக்கட்டும். உங்களுக்கு சந்தோஷத்தை தரட்டும் என்று தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Mr & Mrs எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஜோடி போட்டு வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தான் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடபோகின்றனர் என்றும் அதற்கான பப்ளிசிட்டி ஸ்டன்ட் தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சில தினங்களுக்கு முன்பு கை நிறைய வளையல் போட்டு இருக்கும் புகைப்படத்தை வனிதா ஷேர் செய்திருந்தது அவர் திருமண உறவுக்கு தயாராகி விட்டதையே காட்டுகிறது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!