பிரபல ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு... பரபரக்கும் மாநகர்...

திருச்சிமாவட்டம் திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2021ல் ரவுடி மணிகண்டன் மீது ஆண்டு, ஆட்டோ ட்ரைவர் முருகன் என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் மணிகண்டனின் எதிரிகள் அவரை தாக்குவதற்கு பல வகைகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவமும் அவரை பழிவாங்கும் நடவடிக்கை தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது வீட்டின் அருகே கறிக்கடை மற்றும் சில கடைகள் உள்ளன. வீட்டிற்குள் இருக்க கூடிய மணிகண்டன் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்த நாட்டு வெடிகுண்டு அவரது வீட்டில் வீசப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதில் அடையாளம் தெரியாத 3 பேர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றதை கண்டறிந்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், முருகனின் ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!