பள்ளத்தாக்கில் பாய்ந்த சுற்றுலா பேருந்து... 2 சிறுவர்கள் பலி... பதற வைக்கும் வீடியோ!.

 
சத்புரா

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் எல்லையில் உள்ள சுற்றுலாத் தலமான சத்புரா, கண்கவர் காட்சிகளைக் காண, குறிப்பாக மழைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகளால் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) மாலை குஜராத் மாநிலம் தாங் மாவட்டத்தில் உள்ள சத்புரா காட் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறார்கள் உயிரிழந்தனர்.


விபத்தின் போது இயற்கைக்காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.வீடியோ காட்சிகளின்படி, லாரியை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்தில் 70 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web