கள்ளக்காதலுக்கு இடையூறு... இளம் ஜோடி தீக்குளித்து தற்கொலை!

கணவர் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் மனைவியும் கள்ளக் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அபில் ஆபிரகாம் (வயது 29). இவர் பெங்களூரில் தங்கி நர்சிங் சர்வீஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதே போல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவ்மினி தாஸ் (வயது 20). இவர் பெங்களூரில் தங்கி தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படிப்பை படித்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ தொடங்கினர். பெங்களூர் கொத்தனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட தொட்டகுப்பியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் உள்ள பிளாட்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ தொடங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் வசித்து வரும் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டை திறக்க முயன்றனர். ஆனால் அவர்களால் திறக்க முடியாத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டு உள்ளே இருவரின் உடலிலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரின் உடலிலும் பிடித்த தீயை அணைத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது சவ்மினி தாஸ் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அபில் ஆபிரகாமுக்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அறிந்தவுடன் கொத்தனூர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.
பெங்களூரில் தங்கி நர்சிங் படித்து வந்த சவ்மினி தாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது. திருமணத்துக்கு பிறகு அவர் தனது கணவர் அனுமதியுடன் பெங்களூரில் தங்கி நர்சிங் படிப்பை தொடங்கி உள்ளார். இந்த வேளையில் அபில் ஆபிரகாமை சந்தித்துள்ளார்.
இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். சவ்மினி தாஸ் தனது கணவரை மறந்து கள்ளக்காதலன் அபில் ஆபிரகாம் உடன் சேர்ந்து ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே சமீபத்தில் சவ்மினி தாஸ் மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது கணவரிடம் அபில் ஆபிரகாம் பற்றி கூறினார். மேலும் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்காக திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதற்கு அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் சவ்மினி தாஸ், தனது கணவரை பிரிந்து அபில் ஆபிரகாமுடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்துள்ளார். இதையடுத்து அவர் மேற்கு வங்கத்தில் இருந்து மீண்டும் பெங்களூர் வந்த நிலையில் இருவரும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரை விட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரும் எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை. அதே நேரத்தில் சவ்மினி தாஸை பிரிய அவரது கணவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!