சுவரில் நின்ற கோழியை ஒரே ஜம்ப்பில் தாவிப் பிடித்த சிறுத்தை... வைரல் வீடியோ!

 
கோழி

 தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. குறிப்பாக சிறுத்தை, யானைகள் போன்ற காட்டு விலங்குகள் சாலையை கடப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் என்பது சற்று அதிகமாக இருக்கிறது.


 கோவையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடும் சிசிடிவி காட்சி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு வீட்டின் தடுப்பு சுவரில் கோழி   நின்று கொண்டு இருந்தது.  அப்போது அங்கு வந்த சிறுத்தை கோழியை பிடிப்பதற்காக சுவரில் ஏறி ஒரே ஜம்ப்பில் அதை கவ்வி பிடித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web