கலவரத்தில் முடிந்த காதல் விவகாரம்.. நடுரோட்டில் மோதிக்கொண்ட இணைபிரியா நண்பர்கள்!

 
சபரி -   ஜோஷி

ஒரே பெண்ணை இரு நண்பர்கள் காதலிப்பதும் அதற்காக சண்டை போட்டுக்கொள்வதும் படத்தில்  நடக்கும் சம்பவங்கள். இது தற்போது உண்மையில் நிகழ்ந்திருக்கிறது. காதல் தேசம் திரைப்பட பாணியில் ஒரே பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் சபரி. ``காதல் தேசம்'' பாணியில் அவரும், அவரது நண்பர் ஜோஷியும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் பகை வளர ஆரம்பித்துள்ளது. அடிக்கடி மோதலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். 

சாதி சண்டை

இந்நிலையில், காதல் விவகாரத்தில் வாக்குவாதம் முற்றி இரணியல் பகுதியில் நடுரோட்டில் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web