மனசைப் புரிஞ்சுக்காத காதலி... தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் தற்கொலை!

 
நவீன்குமார்

‘எவ்வளவோ சொல்லியும் என் மனசை அவ புரிஞ்சுக்கவே இல்லை... ராணி மாதிரி பார்த்துப்பேன்.. நல்ல எதிர்காலத்தை மிஸ் பண்றா... நா மட்டும் அவ இல்லாம எப்படி சந்தோஷமா இருக்கிறது’ என்பதைப் போன்ற வாக்கியங்கள் தான் பெரும்பாலான ஒருதலைக் காதலர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால் தற்கொலை எதற்கும் தீர்வு கிடையாது. உங்களுடைய பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் மூழ்கடித்து உங்க எதிர்காலத்தையும் பாழாக்கி கொள்ளாதீங்க. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி தே.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி உஷா. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஏமுமலை விபத்தில் உயிரிழந்தார். தம்பதியருக்கு 2 மகன்கள் இருந்தனர். இளைய மகன் நவீன்குமார் (வயது 22). பொறியாளர். இதற்கிடையே நேற்று மாலை நவீன்குமார் உறவினரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் நவின்குமாரை பல்வேறு இடங்களில் தேடினர்.

ரயில் தற்கொலை

நவீன்குமாரின் உறவினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நவீன் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்நிலையில், சர்க்கரை செட்டிப்பட்டி கிராமம் 4 கால் பாலம் பகுதியில் நவீன்குமாரை தேடியபோது சேலம்-சென்னை ரயில்வே பாலம் அருகே நவீன்குமாரின் மோட்டார் சைக்கிள் நின்றது. இதை பார்த்த உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். அவரை காணவில்லை. உடனே அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். சிறிது தூரத்தில் தண்டவாளத்தில் செல்போன் அடிக்கும் சத்தம் கேட்டது.

அங்கு சென்று பார்த்த போது நவீன்குமார் முகம் சிதைந்து இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் நவீன்குமார் தண்டவாளத்தில் தலை வைத்து  தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் விசாரணையில் உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web