வேறொரு பெண்ணுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்த காதல் கணவன்... கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த மனைவி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராமசாமிநகரில் வசித்து வருபவர் 40 வயது கலைச்செல்வி . இவர் பொறியியல் பட்டதாரி. இவரும் வஉசி நகரை சேர்ந்த 45 வயது லோகநாதனும் காதலித்து 2016ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். வரதட்சணையாக 43 சவரன் தங்கநகைகள், ரூ 2 லட்சம் ரொக்கம், பீரோ கட்டில், வாஷிங்மெஷின் போன்ற பொருட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சமீபகாலமாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர்.

இதில் வரதட்சணையாக பணம் நகை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கலைச்செல்வி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தம்பதி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு பெண்ணுடன் லோகநாதன் புதுப்பேட்டையில் தனிக்குடித்தனம் நடத்திவந்து உள்ளார் .
இது குறித்து அறிந்த மனைவி கலைச்செல்வி அங்கு நேரில் சென்று கையும்களவுமாக பிடித்து வீட்டுக்கு பூட்டுபோட்டுள்ளார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைச்செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . பின்னர் பூட்டை திறந்து லோகநாதனை வெளியே வரவைத்தனர் . அப்போது லோகநாதனுடன் வீட்டுக்குள் இருந்த பெண்ணுக்கும் மனைவி கலைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
தங்கள் லிவிங் டுகெதராக வாழ்வதாக அந்த பெண் கூறினார். இருவரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் .காதலி வீட்டில் இருந்த கணவனை மனைவி கையும்களவுமாக பிடித்து வீட்டை பூட்டிவிட்டு சண்டையிட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
