உஷார்... உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி
 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாழ்வான பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்க. ரொம்பவே பத்திரமாக இருங்க.

காற்றழுத்த தாழ்வு பகுதி

குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை வெளியே அவசியமில்லாமல் தனியே அனுப்பாதீங்க. மழைக் காலங்களில் மின்சாதன பொருட்களை கவனமுடன் பயன்படுத்துங்க.இம்மாதம் 24ம் தேதி காலைக்குள், தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!