அச்சச்சோ... உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி... சூறாவளி காற்று... மீனவர்களுக்கு எச்சரிக்கை... வானிலை ஆய்வு மையம் தகவல்!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி
 


இன்று முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

அடுத்து வரும் 2 நாட்களில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வழுப்பெற்று வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு -வடமேற்கு திசையை நோக்கி வடதமிழ்நாட்டை நோக்கி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அக்டோபர் 16ம் தேதி தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 21 செ.மீ.க்கும் அதிக மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் 16ம் தேதி சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  தமிழகத்தில் இன்று அக்டோபர் 17ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை கனமழை வெதர்மேன்

அதே சமயம் விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!