வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது... வானிலை மையம் அறிவிப்பு!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, நாளை ஒடிசா - மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

எனவே இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

நேற்று மதியம் 1.45 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகி உள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. சோழிங்கநல்லூர், பாரிமுனை பகுதிகளில் தலா 17 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. மடிப்பாக்கம், எண்ணூர், கொரட்டூர், நெற்குன்றம், ஆற்காடு ஆகிய இடங்களில் தலா 14 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

காற்றழுத்த

திருவள்ளூர், அம்பத்தூர், செம்பரம்பாக்கம், வளசரவாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அயப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், திருவாலங்காடு, பூண்டி, காவேரிப்பாக்கம், திருத்தணி, கலவை ஆகிய இடங்களில் தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

இன்னும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 சென்டி மீட்டர் முதல் 10 சென்டி மீட்டர் வரை மழை அளவு பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று அதிகாலையில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக காணப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?