இனி 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை !

 
மெட்ரோ ரயில்


தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பொதுப்போக்குவரத்து சேவையில் பேருந்து மின்சார ரயில்களை தாண்டி  மெட்ரோ ரயில் சேவை   நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறைவான நேரத்தில் பாதுகாப்பான   பயணத்தை விரைவாக்கி தரும் வகையில்  மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும்  ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர்.

மெட்ரோ


இந்நிலையில் விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் நீள வழிதடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு  ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக தற்போது 10  நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்

மேலும் ரயில் சேவை பாதிப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகத்தில் இந்த அறிவிப்பால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web