செல்போன் கடையில் புகுந்து உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல்.. பகீர் பின்னணி!

 
கண்ணன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் கண்ணன் என்பவர் சொந்தமாக செல்போன் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அப்பகுதியில் இருந்து ஏராளமானோர் செல்போன் தொடர்பான பொருட்களை வாங்கிச்செல்வர். இதனால் எப்போதும் ஆட்கள் நின்றுக்கொண்டு இருப்பர்.

இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி இவரது கடைக்கு வந்த சிலர், எதிர்பாராதநேரத்தில் திடீரென கண்ணனை தாக்கியுள்ளனர். கண்ணனை கடுமையாக தாக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. பின்னர் இது குறித்த புகாரில் போலீசார் கண்ணனிடம் விசாரணை நடத்தினர்.

கண்ணன்

அப்போது, கண்ணனுக்கும், பட்டுக்கோட்டையை சேர்ந்த தயாநிதி என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உணவகத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் முன்விரோதம் இருந்து  வந்ததாக தெரியவந்தது.

இந்நிலையில் கண்ணன் தனது கடையில் செல்போன்களை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது தயாநிதியும் அவரது நண்பர்களும் வந்துள்ளனர். அப்போது  திடீரென கண்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

கண்ணன்

கண்ணன் தாக்கப்பட்ட சிசிடிவி வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web