அதிர்ச்சி... சிவகாசியில் 10 உசுரைக் காவு வாங்கிய பட்டாசு ஆலையில்... மீதமிருக்கும் பட்டாசுகளை கொள்ளையடிக்க சென்ற மர்ம கும்பல்!

 
டூவீலர்கள்
 சிவகாசி அருகே 10 உசுரைக் காவு வாங்கிய பட்டாசு ஆலையில் மீதமிருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளைக் கொள்ளையடிக்க நள்ளிரவில் சென்ற மர்ம கும்பலை அந்த பகுதியில் இருந்த கிராம மக்கள் விரட்டி அடித்தனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கடந்த 9ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக குத்தகைதாரர் முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆலை உரிமையாளர் சரவணன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டாசு விபத்து


பட்டாசு ஆலைக்கு தற்காலிகமாக வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைக்க உள்ள நிலையில், நள்ளிரவு  மர்ம நபர்கள் சிலர் டூவீலர்கள், லோடு ஆட்டோக்களில் அந்த பகுதியில் சென்றதைப் பார்த்து சந்தேகமடைந்த கிராம மக்கள், பட்டாசு ஆலைக்கு திரண்டு சென்று பார்த்தனர். அப்போது, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெடிக்காத பேன்சி ரக பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்மக் கும்பல் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள், கொள்ளையர்களை விரட்டினர். பொதுமக்கள் திரண்டதால் டூவீலர்கள், லோடு ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர். 

 

பட்டாசு ஆலை
தகவல் அறிந்து சிவகாசி கிழக்கு போலீசார் வந்து டூவீலர்கள், லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். டூவீலரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலை முன்பு முட்புதர்களில் 100க்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்கள் குவிந்து கிடந்தன. இவற்றை கொள்ளையர்கள் போட்டு சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web