ZAAROZ... இனி உணவு டெலிவரிக்கு புதிய செயலி... ஸ்விக்கி, சொமேட்டோ கிடையாது!

 
ZAAROZ


 
நாமக்கல் மாவட்டத்தில் உணவு டெலிவரிக்கு செக் வைக்கும் வகையில்  அதிரடி முடிவு ஒன்றை நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் எடுத்துள்ளனர். அதன்படி  உணவு டெலிவரிக்கு இனி ZAAROZ - என்ற புதிய செயலியை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இனி ஆன்லைன் உணவு விநியோகத்திற்கு இந்த செயலியை பயன்படுத்தப் போவதாக உணவகங்கள் அறிவித்துள்ளன.ஒரே மாதிரியான கமிஷன் தொகை வசூலிப்பது இல்லை, கூடுதல் கமிஷன் தொகை என பல்வேறு காரணங்களை முன்வைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்திருந்தனர்.  குறிப்பாக, 10,000 ரூபாய் மதிப்புள்ள உணவு வியாபாரத்தில், 4,000 ரூபாய் வரை கமிஷனாக பிடித்துக் கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.

ஸ்விக்கி
 
பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவிடம் இருந்து உணவு ஆர்டர்கள் எடுப்பது இல்லை என நாமக்கல் ஹோட்டல் சங்க உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர். ஒரே மாதிரியான கமிஷன் தொகை இல்லை,  கூடுதல் கமிஷன் தொகை என பல்வேறு காரணங்களை முன்வைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியிருந்தனர்.  
இதனால், நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் ஆன்லைனில் உணவு ஆர்டர் போட்டு சாப்பிடுபவர்கள்  கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  அதேபோல, உணவு டெலிவரி ஊழியர்களும் டெலிவரி ஆர்டர் கிடைக்காததால் திண்டாடினர். போராட்டம் நடைபெற்ற நாளில் நாமக்கல் தாலுகாவில் 8 லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், உணவு டெலிவரிக்கு செக் வைக்கும் வகையில்  அதிரடி முடிவு ஒன்றை நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் எடுத்துள்ளனர். அதாவது, உணவு டெலிவரிக்கு இனி ZAAROZ - என்ற புதிய செயலியை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இனி ஆன்லைன் உணவு விநியோகத்திற்கு இந்த செயலியை பயன்படுத்தப்போவதாக உணவகங்கள் அறிவித்துள்ளன.

ஸ்விக்கி, சொமேட்டோ

இந்த செயலி ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதாகவும் சேலம் ஆத்தூர்  பகுதிகளில் இந்த செயலி டெலிவரி சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.   ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய உணவு டெலிவரி நிறுவனங்கள் ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு விதமாக கமிஷன் பிடிப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.  
குறிப்பாக, 10,000 ரூபாய் மதிப்புள்ள உணவு வியாபாரத்தில், 4,000 ரூபாய் வரை கமிஷனாக பிடித்துக் கொள்வதாகவும் அதுபோக விளம்பர கட்டணமும்  வசூலிப்பதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?