ஒருதலை காதல் விவகாரம்.. பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட நபர் அதிரடியாக கைது!

 
அஃப்ரித்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் நெல்யாஹுடிகேரியை சேர்ந்தவர் அஷ்ரப் மகன் அஃப்ரித் (21). இவர் அதே ஊரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அப்ரித்தின் காதலை அந்த இளம்பெண் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. அப்ரித் அந்த இளம்பெண்ணை காதலிக்குமாறு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

அஃப்ரித் வேலைக்காக ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றிருந்தார். அங்கிருந்து, அப்ரித் பெண்ணை தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்கவில்லை என்றால் உனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் அவரது மிரட்டலை அந்த இளம்பெண் ஏற்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்ரித், அந்த இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையறிந்த இளம்பெண் 2023 டிசம்பரில் சித்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அவர் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, வெளிநாட்டில் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அப்ரிடதை சித்தாப்பூர் போலீசார் நேற்று மும்பை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

அப்போது அஃப்ரித் கூரிய ஆயுதத்தால் கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் மும்பை மற்றும் சித்தாப்பூர் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து நீதிமன்ற காவலுக்கு கொண்டு வந்தனர். குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமராஜன் தலைமையிலான போலீஸார் அப்ரித்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web