அதிர்ச்சி... விமானத்திற்குள் புகைப்பிடித்த பயணியால் பரபரப்பு.!

 
ஆறுமுகம்
  

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக  இருந்தது. விமானத்தில் 174 பயணிகள் ஏறி அமர்ந்து விட்டனர். விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர்.  பயணிகள் சீட் பெல்ட் அணிந்துவிட்டாரா? என்று விமான பணிப்பெண்கள் சரி பார்த்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (30) என்ற பயணி இருக்கையில் அமர்ந்தபடி புகை பிடித்துக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் விமான பணிப்பெண்கள், விமானத்திற்குள் புகை பிடிக்க அனுமதி கிடையாது. எனவே சிகரெட் அணைக்க வேண்டும். பாதுகாப்பு சோதனையையும் மீறி எவ்வாறு விமானத்திற்குள் சிகரெட் எடுத்து வந்தார்? என்று விசாரித்தனர்.

knife airport விமான நிலையம் கத்தி விமானநிலையம் உள்ளூர்

இது பற்றி விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் தெரிவித்தனர். விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி புகைப்பிடித்துக் கொண்டிருந்த பயணி ஆறுமுகத்தை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். பயணியின் உடமைகளும் கீழே இறக்கப்பட்டன. பயணி ஆறுமுகத்தின் மலேசிய பயணம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 173 பயணிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக  கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது. 

இண்டிகோ

இதற்கிடையே விமானத்திலிருந்து இறக்கப்ப்ட்ட  செய்யப்பட்ட பயணி ஆறுமுகத்தை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆறுமுகம் வேலைக்காக மலேசியா சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. பாதுகாக்கப்பட்ட இடத்தில் தடையை மீறி புகை பிடித்தது, விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web