அதிர்ச்சி... நடைப்பயிற்சி சென்றவர் வாகனம் மோதி பலியான சோகம்!

 
ராமையா
 தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இன்று காலை நடை பயிற்சி மேற்கொண்ட முதியவர் ஒருவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராமையா. 70 வயதுடைய இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், நான்கு மகன்களும் ஒரு மகளும் என ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் 5 பேரும் திருமணம் ஆகி பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
தினமும் காலையில் நடை பயிற்சி மேற்கொள்வதை  வழக்கமாகக் கொண்டிருந்த ராமையா, வழக்கம் போல் இன்று காலையும் நடை பயிற்சி மேற்கொள்ளச் சென்ற போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்து தகவல் அறிந்து அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கூடியுள்ளனர். உத்தமபாளையம் காவல்துறையினர் ராமையாவின் உடலைக் கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைத்து விட்டு, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!