சர்க்கரை நோயாளிகளுக்கு இனி நிரந்தர தீர்வு.. சீன மருத்துவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!
சீன மருத்துவர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. அரை மணி நேர அறுவை சிகிச்சை மூலம் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சிகிச்சை முறையில் நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு திசு எடுக்கப்பட்டு, சில ரசாயன மாற்றங்களைச் செய்து, மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும்.
இதை முதலில் ஷாங்காய் நகரில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டது. 25 வயது பெண் நோயாளிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, இன்சுலின் ஊசி போடாமல் சர்க்கரை அளவு சீராகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வகை 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. சீனாவின் மேம்பட்ட மருத்துவ சாதனைகள் இந்த நோய்க்கான எதிர்கால சிகிச்சைகளை மேலும் மாற்றியமைக்கும் என்று சீன மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!