மின்கம்பி அறுந்து விழுந்து ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து பலி!

 
கடலூர்
 


 
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று ஜூலை 8ம் தேதி காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காலையில்  இந்த செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த 45வயது அண்ணாதுரை  மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால், மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  

ஆம்புலன்ஸ்

இந்த இரட்டை சோகம், உள்ளூர் மக்களிடையே பெரும் துயரத்தையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் எழுப்பியுள்ளது. விபத்து நடந்தபோது, பள்ளி வேன் ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்க முயற்சித்தது. இதனால்   வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் வேன் முற்றிலும் நொறுங்கியதாகவும், பயணித்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், விபத்தின் தாக்கத்தால் அருகில் இருந்த மின்கம்பி அறுந்து, அண்ணாதுரை மீது விழுந்ததாக அங்கிருந்த  மக்கள் தெரிவித்தனர், இதனால் அவர் உயிரிழந்தார்.இந்த விபத்து, ஆளில்லா ரயில்வே கேட் பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. வேன் ஓட்டுநர், ரயில் வருவதை கவனிக்காமல் அவசரமாக கேட்டைக் கடக்க முயற்சித்ததாகவும், இதனால் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ்

மேலும், மின்கம்பி அறுந்து விழுந்ததற்கு மின்சார வாரியத்தின் பராமரிப்பு குறைபாடு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையும், ரயில்வே துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. விரைவில் சம்பவம் எப்படி நடந்தது இந்த துயர சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?