அடுத்த அதிர்ச்சி... தொடரும் அவலம்... 10 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

 
மோகன் குமார்
 சென்னையில்  பூங்கா ஒன்றில் வளர்ப்பு நாய்கள் சிறுமியைக் கடித்துக் குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். டுகாயமடைந்த நிலையில், சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த 5ஆம் தேதி இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக நாய் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நாய் வளர்ப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்தது. எனினும் நாய்கடி சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற சம்பவம், கோவை அருகே சூலூரில் சிறுமி ஒருவருக்கு நடந்துள்ளது.

மோகன்
கோவை பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவரது மகள் அக்ஷயா கீர்த்தி. 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, இன்று அவரது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு நாய் ஆக்ரோஷமாக குரைத்தபடி சிறுமியை நோக்கி ஓடி வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி நாயிடமிருந்து தப்பித்துக் கொள்ள தப்பி ஓடியுள்ளார். சிறுமி தவறி கீழே விழுந்து விட, அவர் மீது பாய்ந்த நாய் சிறுமியின் கழுத்து, தோள்பட்டை, காது என 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவ மனையில் சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இது தொடர்பாக சிறுமியின் தந்தை மோகன் குமார் கூறுகையில், "கடந்த 2022ம் ஆண்டு அக்ஷயா கீர்த்தியை இதே நாய் கையில் கடித்தது. அப்போது நாயின் உரிமையாளரிடம் நாயை கட்டி வைக்குமாறு கூறியும் அவர்கள் கட்டி வைக்கவில்லை. சாலையில் செல்வோரை நாய் அடிக்கடி துரத்தி வருகிறது. தற்போது மீண்டும் தனது மகளை இரண்டாவது முறையாக கடித்துள்ளது. தற்போது கூட நாயின் உரிமையாளர் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்" என்று குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ள மோகன்குமார் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!