மோசமான வானிலை... சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசர அவசரமாக திருச்சியில் தரையிறக்கம்!
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி காலை 10.20 மணிக்கு புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அங்குள்ள மோசமான வானிலை காரணமாக சிக்கலில் சிக்கியது. இலங்கையில் நிலவும் கடும் மேகமூட்டம் மற்றும் காற்று சுழல்களின் தகவல் விமானிக்கு வந்து சேர்ந்தது.

உடனடியாக விமானி இந்த நிலைமை குறித்து திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். பின்னர் அவசர அனுமதி வழங்கப்பட்டதால், 44 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் பாதுகாப்பாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

யாழ்ப்பாணத்தில் வானிலை சீரானதும் மீண்டும் புறப்பட அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
