சிஎஸ்கே யில் கழட்டி விடப்படும் வீரர்... ரசிகர்கள் அதிர்ச்சி..!!

 
சிஎஸ்கே

 ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஐபிஎல்  போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்ற்னா. அந்த வகையில் 2024 சீசனுக்கான ஏலம் டிசம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. 2023 ஐபிஎல்லை பொறுத்தவரை 5 முறை கோப்பையை வென்று  நடப்பு சாம்பியன்  மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. 2024ல் இந்த சாதனையை தக்க வைக்கவும் சென்னைசூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. அதற்கான முனைப்புடன் அணி செயல்படத் தொடங்கியுள்ளது.  அனைத்து அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களை விடுவித்து இறுதிக்கட்ட வீரர்களின் பட்டியலை  நவம்பர் 26க்குள் சமர்ப்பிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

இந்நிலையில் 2024 சீசன் ஏலத்திற்கு முன்பாக இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க சென்னை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.  இங்கிலாந்தின் மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவரை கடந்த வருட ஏலத்தில் சென்னை நிர்வாகம் 16.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகையில் போட்டி போட்டு சென்னை வாங்கியது. இருப்பினும் ஆரம்பத்திலேயே ஆஷஸ் தொடருக்காக ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாட மாட்டேன் என்று அறிவித்த அவர் முழங்கால் காயத்தால் ஓரிரு போட்டிகளில் மட்டுமே சென்னைக்காக விளையாடினார்.  ஏமாற்றமடைந்த சென்னை ரசிகர்கள் அவரை கழற்றி விடலாம் எனக் கூறியிருந்தனர்.  உலகக் கோப்பையிலும் ஓய்விலிருந்து கம்பேக் கொடுத்ததும் இங்கிலாந்தை வெற்றி பெற வைக்க முடியவில்லை. -காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்ய உள்ள அவர் அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட மாட்டார் எனக் கூறியுள்ளார்.

IPL 2021 Finals : 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே!

இதனால்  2024 சீசனில் விளையாடுவது சந்தேகமே. இதனால்   அவரை விடுவிக்க சிஎஸ்கே முடிவெடுத்துள்ளது. இது குறித்து பெயர்வெளியிட விரும்பாத அணி நிர்வாகி “   ஸ்டோக்ஸ் பெரிய போட்டிகளில் அசத்தக்கூடிய பிளேயர் என்பதால் நாங்கள் விடுவிக்க விரும்பவில்லை”  “ஆனால் அவர் காயத்தால் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை அவர் விளையாடாவிட்டால் எங்களுக்கு நஷ்டமடையும். அந்த 16 கோடியில் மற்ற சில  நல்ல வீரர்களை வாங்க முடியும்” எனக் கூறினார். இதே போலவே குஜராத் அணிக்காக 10 கோடிக்கு விளையாடும் நியூசிலாந்தின் லாக்கி பெர்குசனை அந்த அணி நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web