4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்... சராமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள்!!

 
காவலர்

இந்தியாவின் வடமாநிலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் 4 வயது சிறுமியை  காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கு வெளியே  பொதுமக்கள் திரண்டு வந்து மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  இவர்கள் ஒன்றிணைந்து குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்துள்ளனர். தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங், அந்த சிறுமியை தனது அறைக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பாலியல்

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.  காவல்நிலையத்தில் அருகில் வசிக்கும் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில்  அந்த காவலர்  அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன்  அந்த எஸ்.ஐ. மீது ராகுவாஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாலியல் பலாத்காரம் செய்த சின்னஞ்சிறிய சிறுமிக்கு  மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது எனவும்,   தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.  காவல்நிலையத்தில் காவலருக்கு எதிராக நடந்த போராட்டத்தில்   அவர்கள் போலீசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் பூபேந்திர சிங்கையும் அடித்து உதைத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் பலர் தாக்கியதில் அந்த போலீஸ்காரர் பலமாக தாக்கப்பட்டுள்ளார். 

கைது


சம்பவ இடத்துக்குச் சென்ற பாஜக எம்பி கிரோடி லால் மீனா, “லால்சோட்டில் 7  வயது தலித் சிறுமியை போலீஸ்காரர் பலாத்காரம் செய்த சம்பவம் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அப்பாவி குழந்தைக்கு நீதி கிடைக்கும்"  சிறுமியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்  . நான் சிறுமிக்கு உதவுவதற்காக இங்கு வந்துள்ளேன். சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். என்னைப் பொறுத்தவரை, தேர்தல்  வரும் போகும். ஆனால் பாதிக்கப்பட்ட   குடும்பத்திற்கு நீதி வழங்குவதே எனது முதல் முன்னுரிமை. கடமை.  இது வெட்கக்கேடான சம்பவம்" எனக் கூறியுள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web