இந்திய பெருங்கடலில் 6.7 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… !

 
நிலநடுக்கம்

 இன்று ஜூலை 10ம் தேதி காலை  10.25க்கு இந்திய பெருங்கடலில் திடீரென தென்னாப்பிரிக்காவிற்கு அருகே 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் இருந்து  சுமார் 2,216 கி.மீட்டர் தூரத்தில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.இது குறித்து ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அந்தமானில் நேற்றிரவு நிலநடுக்கம்: அதிகாரிகள் தகவல்!

ஜூலை 10 புதன்கிழமை அதிகாலை 6.55 மணிக்கு  உள்ளூர் நேரப்படி (GMT +2) தென்னாப்பிரிக்காவின் கடற்கரைக்கு அருகில் இந்தியப் பெருங்கடலுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  நிலநடுக்கம் 10 கிமீ  மிக ஆழமற்ற ஆழத்தில் இருந்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை,  வெளியே சாலைகள் மற்றும் கட்டிடங்கள் என எதற்கும் சேதம் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web