அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா தேரோட்டம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193-வது ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் விமரிசையாக நடந்தது.

திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, பகல் 12.15 மணிக்கு உச்சிப்படிப்பு நடந்தது. பகல் 1.15 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தேரில் அமர்ந்த அய்யா வைகுண்டரை திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர்.

இந்த தேரோட்டத்தை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பின்னர் அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவில் அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
