ஓகே... ஓகே... எல்லாமே கரெக்ட் தான்... அலட்சியமாக விடைத்தாளை திருத்தும் பேராசிரியை... வைரல் வீடியோ!

 
பேராசிரியர்

 பீகார் மாநிலம் பாடலிபுத்திரா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இதில் பேராசிரியர் ஒருவர் மாணவர்கள் எழுதிய விடைகளை முழுவதும் படித்து பார்க்காமலேயே  நொடிகளில்  விடைத்தாள் பக்கங்களை புரட்டி சரி பார்த்தவாறு மதிப்பெண்களை வழங்குகிறார்.

இது குறித்த  வீடியோ வைரலாகி வரும் நிலையில்  பேராசிரியர் மதிப்பெண் வழங்கும் விடைத்தாள்களுக்கு உரிய மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என இதற்கு நெட்டிசன்கள் தங்கள்  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்  இதனை பார்த்த பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பணியில் அலட்சியமாக செயல்பட்ட அந்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!