2 பெண்குழந்தைகள், மனைவியுடன் ரயில்வே ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை... பெரும் சோகம்!

 
ரீனா

 மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிகோடா கிராமத்தில் வசித்து வருபவர் நரேந்திர சதார். இவர்  ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார்.  இவருடைய மனைவி  ரீனா. இவர்களுக்கு 6 வயது மற்றும் 6 மாதத்தில் 2 பெண் குழந்தைகள்.  இந்நிலையில் நரேந்திர சதார் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர்களின் உடல் இன்று ரயில்வே தண்டவாளத்தில்   மீட்கப்பட்டுள்ளது.

ரீனா


இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 4 பேரின் சடலத்தையும் ரயில்வே போலீசார் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரீனாவின் தந்தை தன் மகள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன் மாமியாருக்கும் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறினார்.  வழக்கமான சம்பவம் தான் அதனால் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக்  கூறியுள்ளார்.  இச்சம்பவம்  குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web