574 பணியிடங்கள்... அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராகும் அரிய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரைவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியும், விருப்பமும் உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Guest Lecturers
காலியிடங்கள்: 574
சம்பளம்: மாதம் ரூ.25,000

கல்வித் தகுதி: 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 50 சதவீதம்
மேலும் சம்மந்தப்பட்ட பாடத்தில் நெட், செட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசி விதிமுறைப்படி பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 57-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, முதுநிலை பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.100 மட்டும். இதர பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tngasa.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.8.2025
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
