திருச்சியில் விடிய விடிய தீவிர சோதனை! அதிரடி காட்டிய சத்திய பிரியா!

 
சத்தியபிரியா

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் நேரடி சோதனையில் ஸ்ரீரங்கம் காவல் சரக மேலூரில் கள்ளசந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரின் வீட்டிலிருந்து அரசு மதுபானம் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் திண்டிவனம் ஆகிய ஊர்களில் கள்ளச்சாராயம் குடித்து மரணம் எய்தியோர் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரிலும், தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரிலும் தமிழகம் முழுவதும் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்று இரவு திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் சரகம் மேலூர் கிராமம் வடக்கு தெரு, கிழக்கு தெரு, கொள்ளிடக்கரை மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நேரடியாக மதுவிலக்கு வேட்டை மேற்கொண்டார்கள். 

கள்ளச்சாராயம் சத்தியபிரியா

மேற்படி மதுவிலக்கு வேட்டை சோதனையின் போது மேலூர் வடக்கு தெருவில் வசித்து வரும் மருதமுத்து மகன் பிரபு என்பவரின் வீட்டில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களைக் கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் ஏற்கனவே கள்ள சந்தையில் மதுபானம் விற்று வந்த தங்கபொண்ணு என்கிற மூதாட்டிக்கு கள்ளசந்தையில் மதுபானம் விற்க கூடாது என்றும் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகள் செய்வதாகவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.

கடந்த 4 நாட்களாக திருச்சி மாநகரத்தில் அனைத்து காவல் அதிகாரிகளும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தியதில், கள்ளச்சந்தையில் அரசு மதுபானங்களை விற்பனை செய்ததாகவும், விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாகவும் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் சம்மந்தப்பட்ட 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி 78 பேர்களிடமிருந்து 605 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

திருச்சி கார்த்திகேயன்

திருச்சி மாநகரில் இது போன்ற கள்ளசாராயம், போலி மதுபானம் மற்றும் கள்ளசந்தையில் மதுபானம் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சமூக ஆர்வலர்களோ மருந்து கடைகளில் போதை மாத்திரை விற்பனை மற்றும் கஞ்சா வியாபார விற்பனை ஆகியவற்றையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

போதை மாத்திரை விற்போர், கஞ்சா வியாபாரிகளை அடக்கி ஒடுக்கி வைத்தாலே திருச்சி மாநகரிலும் புறநகரிலும் ஏற்படும் பல்வேறு குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும்.  குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வந்து வழிப்பறி செய்வோர் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து விடமுடியும் என கோரிக்கை விடுக்கின்றனர். இக்கோரிக்கைக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா ஆகியோர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு உளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. அவர்கள் மெத்தனமாக செயல்படுகிறார்கள். அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் பொதுமக்கள் முன் வைக்கிறார்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web