அடுத்தடுத்து அதிர்ச்சி... 2 சிறுவர்களை கடித்து குதறிய தெருநாய்!
தமிழகத்தில் அடுத்தடுத்து பல மாவட்டங்களிலும் தெருநாய் கடித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி ஊழியர்களோ, அரசோ இது குறித்து கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், தொடரும் அதிர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை தெருநாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த மாதத்தில் மட்டுமே 8க்கும் மேற்பட்டோர்களை நாய்கள் கடித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் வளர்ப்பு நாய் உள்ளிட்ட பிராணிகள் வளர்ப்பதற்கு அனுமதி கட்டாயம் என்று அறிவித்திருந்தாலும் நாய்கடி சம்பவம் தொடர்ந்து கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளிலும் நாய்கள் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே விண்ணம்பூண்டி கிராமத்தில் சசிகுமார், சிவகாமி தம்பதியின் மகன் ஹரிஷ் மற்றும் சஞ்சய் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று, இவர்களின் வீட்டிற்குள் புகுந்து கடித்துப் குதறி உள்ளது.
சிறுவர்களின் அலறல் சப்தம் கேட்டு வந்தவர்கள் சிறுவர்களை நாயிடம் இருந்து மீட்டனர். உடனடியாக இரு சிறுவர்களையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
