ஊரில் கிடைக்காத சிக்னல்.. ஆன்லைன் வகுப்புக்காக டவர் தேடி அலையும் பள்ளி மாணவர்கள்!
தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கேர்மாளம் ஊராட்சியில் 5 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் சுமார் 3 மலைவாழ் பழங்குடியினர் வசிக்கின்றனர், தொடக்க கல்வி முதல் பிளஸ் 2 வரை 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு செல்போன் நெட்வொர்க் வசதி இல்லை. பிரசவம், காய்ச்சல், விபத்துகள் போன்ற சம்பவங்களைப் புகாரளிக்க கூட, கர்நாடக மாநில நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கூகுள் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இங்கு நெட்வொர்க் இல்லை. மாறாக, கர்நாடக டவர் சிக்னல் கிடைக்கும் அடர்ந்த வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ள இடத்துக்குத்தான் செல்ல வேண்டும்.

கிராமத்தில் இருந்து 2 கி.மீ தூரம் சென்று சிக்னல் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்போன் டவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
