அதிர்ச்சி... மெட்ரோ ரயிலில் தீப்பொறி... அவசரம் அவசரமாக பயணிகள் வெளியேற்றம்!

 
மெட்ரோ
 

சென்னையின் பொதுப்போக்குவரத்துக்களில் மெட்ரோ முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. விம்கோ நகர் - விமான நிலையம் வரை  செல்லக்கூடிய மெட்ரோ ரயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் அவசரம் அவசரமாக நிறுத்தப்பட்டது.

மெட்ரோ

ரயில் பெட்டிகளில் இருந்து  தீப்பொறி கிளம்பியதால் ரயிலில் பயணம் செய்த 300க்கும் மேற்பட்ட பயணிகள்  உடனடியாக ரயிலில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிப்பு வெளியானது.

டெல்லி மெட்ரோ

அதே நேரத்தில்  பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  இந்நிலையில் சென்னை நீல நிற வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு 15 நிமிடங்களுக்கு பின் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web