பகீர்... வெடித்து சிதற போகும் நட்சத்திரம்.. வெறும் கண்ணால் பார்க்க முடியுமாம்.. விஞ்ஞானிகள் தகவல்!

 
 விண்வெளி

விண்வெளியில் இறந்த வெண் குறுமீன் மற்றும் வயதான ரெட் ஜெயண்ட் ஆகியவற்றைக் கொண்ட கொரோனா பொரியாலிஸ் பைனரி அமைப்பு வெடிக்க  காத்திருக்கிறது. பூமியிலிருந்து 3,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கொரோனா பொரியாலிஸ் அமைப்பு, T Coronae Borealis அல்லது சுருக்கமாக T CrB எனப்படும் வெண் குறுமீன் இருப்பிடமாகும். நாசா இந்த வெடிப்பை 'வாழ்நாளில் ஒருமுறை  நடக்கும் வெண் குறுவெடிப்பு (நோவா) என்று விவரிக்கிறது.

இந்த அரிய பிரபஞ்ச நிகழ்வு செப்டம்பர் 2024 க்கு முன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நிகழும்போது, ​​நீங்கள் அதை வெறும் கண்களால் பார்க்கலாம். இதைப் பார்க்க விலையுயர்ந்த தொலைநோக்கி தேவையில்லை என்று நாசா கூறுகிறது. T CrB வெடிப்புகள் 80 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கின்றன, கடைசியாக 1946 இல் இதுபோன்ற வெடிப்பு நிகழ்ந்தது.

T CrB இல் போதுமான தனிமங்கள் குவிந்து அதன் வெப்பநிலை சில மில்லியன் டிகிரி செல்சியஸ் அடையும் போது, ​​அணுக்கரு இணைவு எதிர்வினைகள் ஏற்படத் தொடங்கும். பலர் எதிர்பார்க்கும் நோவா நிகழ்வை இது உருவாக்குகிறது என்று  கூறப்படுகிறது."De Corona Borealis என்ற நட்சத்திரம் மிகவும் சிறியது, அதை நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் அதில் நடக்கும் எதிர்வினை (ஃப்யூஷன் ரியாக்ஷன்) காரணமாக, அதை தற்காலிகமாக பார்க்கலாம். இரவில் வாகனம் ஓட்டும்போது கூட பார்க்கலாம்."

சிறிய வெள்ளை நட்சத்திரம் பெரிய சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து கவர்ந்த அனைத்து பொருட்களையும் வெளியேற்றிய பிறகு, T CrB மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுன். அதன் பிறகு பல வருடங்கள் இந்த நிகழ்வுகள் பார்க்க முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள். 

 காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web