ரஜினி... 10 ஆண்டுகளுக்கு பிறகு வலுவான எதிர்க்கட்சி... காங்கிரசுக்கும் சலாம்!

 
ரஜினி ராகுல்

 இன்று இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக  நரேந்திர மோடி  பதவி ஏற்க உள்ளார். இதற்காக  ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவில் உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.  அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக  இன்று காலை டெல்லிக்கு கிளம்பி சென்றார்.

ரஜினி

அப்போது அவர் சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம்  பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள செல்கிறேன். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மோடி 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதனையான இந்நிகழ்வில் நானும் ஒரு பார்வையாளராக கலந்து கொள்கிறேன்.  இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரசை  மக்கள் தேர்வு செய்துள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான தேர்தலுக்கு அறிகுறி எனக் கூறியுள்ளார்.  சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு  விழாவிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web