ஜஸ்ட் மிஸ்.. நடுரோட்டில் பேக் ஃபிலிப் அடிக்க முயன்ற மாணவி... அதிர்ச்சி வீடியோ!

 
பேக் லிப் மாணவி
 இன்ஸ்டாகிராமிலும், யூ-ட்யூப் ஷார்ட்ஸ்களிலும்  ட்ரெண்டிங்கில் வரவேண்டும் என்று லைக்ஸ்களுக்காகவும், அதிக ஷேர்களுக்காகவும் மெனக்கெட்டு சமயங்களில் உயிரையும் பணயம் வைத்து வீடியோக்களை உருவாக்குகிறார்கள் இன்றைய இளைஞர்கள். பைக்கில் அதிவேகமாக சாலைகளில் செல்வது, உயரமான கட்டிடத்தின் மீது ஏறி தொங்குவது, நடுரோட்டில் படுபயங்கர வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கார்களின்  மேல் அமர்ந்து பயணம் செய்வது, நெருப்பு வளையத்திற்குள் புகுவது என விதவிதமாக ஆபத்தான ஸ்டண்டுகளை மேற்கொண்டு அதனை ரீல்ஸ் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து மகிழ்கிறார்கள்.


இந்நிலையில், ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் கிடையாது என்று பெண்களும் இது போன்ற ஆபத்தான ரீஸ்களை தங்களது சமூகவலைதள கணக்குகளில் பதிவிட்டு லைக்ஸ்களை குவிக்க முயற்சிக்கிறார்கள். சமீபத்தில் புனேவில் இளம்பெண் ஒருவர் உயரமான கட்டிடத்தின் மீது இளைஞர் ஒருவரின் கையைப் பிடித்துக் தொங்கியபடியே பதிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. 

பேக் லிப் மாணவி
இந்நிலையில் நடுரோட்டில் பள்ளி சீருடையில் இரண்டு சிறுமிகள் மேற்கொண்ட ஆபத்தான ஸ்டண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இரண்டு சிறுமிகள் சாலையில் நிற்கின்றனர். ஒரு பெண் நிற்க இன்னொரு பெண் அவரின் தோள்களில் ஏறி பின்னோக்கி டைவ் செய்கிறாள். அவர் மேற்கொண்ட முயற்சி நன்றாக தான் இருந்தது. அந்த மாணவி, வீடியோவில் நன்றாக வரவேண்டும் என்று காற்றில் அற்புதமாக சுழன்று ஒரு ரவுண்ட் அடித்து கீழே இறங்க முயற்சித்தாள்.

ஆனால் லேண்டிங் செய்யும் போது மாணவியால் சரியாக பாதுகாப்பான முறையில் கீழே இறங்க முடியாததால் சாலையில் அப்படியே விழுந்தார். அதன் பின்னர் அவரால் எழுந்திருக்க கூட முடியவில்லை. அவர் அப்படியே சாலை அமர்ந்ததால் அவரது தோழி வந்து உடனடியாக அவரை தூக்கி விட்டார்.லைக்ஸ்களுக்காக இது போன்ற ஆபத்தான வீடியோக்களை உருவாக்காதீங்க என்று பலரும் அறிவுரைக் கூறி வருகின்றனர்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!