தேர்வு எழுதாமலேயே Pass ஆன மாணவன்.. தேர்வு எழுதியும் Fail ஆன மாணவி.. குழம்பிய மாணவர்கள்!

 
தேர்வு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 57 பேர் எழுதினர். இதில் 33 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. இப்பள்ளி மாணவி வைஷ்ணவி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாடத்திற்கான நடைமுறை தேர்வு எழுதியிருந்தார். இதற்கு, 100 மதிப்பெண்களுக்கு, 25 மதிப்பெண்கள் பள்ளியால் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் எழுத்துத் தேர்வில் 75க்கு 21 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வு எழுதிய மாணவி வைஷ்ணவி, தேர்வு எழுதவில்லை என வருகைப் பதிவேட்டில் ஆப்சென்ட் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவி வைஷ்ணவி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.   ஆனால், பல மாதங்களாக பள்ளிக்கு வராத, பொதுத் தேர்வில் கூட வராத தருண் என்ற மாணவர், நடைமுறை தேர்வில் பங்கேற்று, 25 மதிப்பெண்கள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதை அறிந்த மாணவி வைஷ்ணவி அதிர்ச்சி அடைந்தார்.

நேற்று மாணவி வைஷ்ணவியின் பெற்றோர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசனிடம் முறையிட்டு நியாயம் கேட்டனர். மாணவி வைஷ்ணவி செய்முறை தேர்வு எழுதியதாக தலைமை ஆசிரியரிடம் கூறினார். அவரது தேர்வுப் பதிவுகள் பள்ளியில் உள்ளன. கணினியில் பதிவேற்றம் செய்யும் போது மாணவி வைஷ்ணவி பெற்ற செய்முறை தேர்வின் மதிப்பெண்கள் மாணவர் தருண் பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

தேர்வு முடிவுகள்

இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழியின் கவனத்திற்கு தலைமை ஆசிரியர் கொண்டு சென்றார். இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் மேலும் 5 பள்ளிகளில் இதுபோன்ற தவறான பதிவேற்றம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தெரிவித்தார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web