மர அறுவை மில்லில் வேலை செய்து கல்லூரி செல்லும் மருத்துவ மாணவன்!

 
மருத்துவம்
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்–செல்வகுமாரி தம்பதியரின் மகன் விவேக்கீஸ்வரன் சிறுவயது முதலே “மருத்துவர் ஆக வேண்டும்” என்ற கனவுடன் வளர்ந்தார். ஏழ்மை காரணமாக பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாத நிலையிலும், அரசு பள்ளியில் படித்து, திறனாய்வு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஊக்கத் தொகை பெற்றார். 10, 11, 12 ஆம் வகுப்புகளில் முதல் மாணவனாக சாதித்த அவர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். படிப்புக்கான செலவுகளை சம்பாதிக்க விடுமுறை நாட்களில் மர அறுவை மில்லில் வேலை செய்தார்.

மருத்துவர்

மருத்துவ கனவை விடாமல் நீட் தேர்வை எழுதிய விவேக்கீஸ்வரன், கடந்த ஆண்டு 487 மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க இடம் பெறவில்லை. ஆனால் மனம் உடையாமல் மீண்டும் முயன்று இந்த ஆண்டு 427 மதிப்பெண்களுடன் 3ஆம் கலந்தாய்வில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பைப் பெற்றார். “அரசின் சலுகைகள் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம் தான் என்னை இத்தனை தூரம் கொண்டுவந்தது. விடாமுயற்சியே வெற்றியின் திறவுகோல் என்பதை என் வாழ்க்கை நிரூபித்துள்ளது” என அவர் பெருமையுடன் கூறினார்.

பெண் மருத்துவர்

குடும்பத்தின் பொருளாதாரத் தட்டுப்பாட்டை மீறி, அரசுப் பள்ளி மாணவன் என்ற அடையாளத்தோடு மருத்துவர் கனவை நிறைவேற்றிய விவேக்கீஸ்வரன் மீது கிராம மக்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என பலரும் பாராட்டுகளின் மழை பொழிந்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!