நள்ளிரவில் அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக 5 தளங்கள் கொண்ட பல்நோக்கு சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ராமநாதபுரத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்படோர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறையில் நேற்று இரவு திடீரென மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக மின்சார வயர்களில் தீப்பற்றியது. இதனையடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதையும் புகை சூழ்ந்தது.
2 வது தளத்தில் அறுவை சிகிச்சை நோயாளிகள், ஆண்கள், பெண்கள் பிரிவு உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது தீ விபத்தினால் கரும்புகை சூழ்ந்ததால் மருத்துவனை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளை முதல் தளத்துக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு மற்ற நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து மின் கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!