எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் திடீர் சத்தம்... அலறிய பயணிகள் !

 
ரயில்
 

கொல்லம் - அனந்தபுரி விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீா் சப்தத்தினால் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் - நாகர்கோவில் திருநெல்வேலி மணியாச்சி கோவில்பட்டி மதுரை வழியாக சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் 2.50 மணிக்கு உள்ளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் தூத்துக்குடி மாவட்டம் நாரைக் கிணறு ரயில் நிலத்தை கடந்த போது ரயில் ஏசி பெட்டியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதாக கேட் கீப்பர் மணியாச்சி ரயில்வே அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். 

ஜனவரியில் புதிய வழித்தடத்தில் மின்சார ரயில்!! ரயில் பயணிகள் உற்சாகம்!!

உடனடியாக 7.40 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வந்ததும் ரயில்வே அதிகாரிகள் ரயிலை நிறுத்தி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது ஏ1 குளிர்சாதன பெட்டி சக்கரத்தில் ஐந்து இடங்களில் ஓட்டை விழுந்து இருந்தது தெரிய வந்தது. உடனடியாக ரயிலை மணியாக்கி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர் 7.40க்கு வந்து7.42 புறப்பட்டு செல்ல வேண்டிய வழியில் மணியாச்சி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 

ரயில் ரயில்வே நெல்லை திருநெல்வேலி தூத்துக்குடி

இதனால் பயணிகள் என்ன எது என்று தெரியாமல் அச்சத்தில் இருந்தனர். இது சம்பந்தமாக ரயில்வே அதிகாரிகள் மதுரை ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காணொளி மூலம் அந்த வீல் படம் மூலம் காட்டப்பட்டது. சிறிய ஓட்டை என்பதால் ரயிலை மெதுவாக மதுரைக்கு கொண்டு வரும்படி ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பின்பு கையில் சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மெதுவாக சென்றது. இந்த ரயில் மதுரைக்கு சென்றதும் அந்த குளிர்சாதன பெட்டி மாற்றப்பட்டு வேறு பெட்டி இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மணியாச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சுமார் 1500 பயணிகள் பரிதவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?